full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எங்கள் நினைவில் நீங்கள் – அப்துல்கலாம் குறித்து விவேக் உருக்கம்

விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். இன்று அவரது 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பலரும் அப்துல் கலாம் குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள நடிகர் விவேக், அவரது நினைவு நாளை முன்னிட்டு டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: “நீ கவிதைகள் எழுதி வைத்தது தாளில். ஆனால், கனவுகள் இறக்கி வைத்தது எங்கள் தோளில். அவ்வப்போது இடறுகின்றது; ஆயினும் பயணம் தொடர்கின்றது. உங்கள் கனவில் நாங்கள்… எங்கள் நினைவில் நீங்கள்” என விவேக் குறிப்பிட்டுள்ளார்.