இந்தியன் 2 திரைவிமர்சனம்

cinema news movie review

இந்தியன் 2 திரைவிமர்சனம்

28 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா இல்லை ஏமாற்றம் கொடுத்தார்களா? என்று பார்ப்போம் மிக பிரமாண்டமாக வலம் வந்திருக்கும் ஷங்கர் பிரமாண்டத்தொடு ஒரு சிறந்த கதையமைப்புடன் நம்மை சிந்திக்கவும் அதோடு ரசிக்கவும் வைத்து இருக்கிறார் ஷங்கர்

கமல்ஹாசன்,சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா,ஜெகன்,பிரியா பவானி ஷங்கர்,ரிஷிகாந்த், சமுத்திரகனி,பாபி சிம்ஹா, நெடுமுடி வெனு, மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மன் ஒளிப்பதிவில் வெளிவந்து இருக்கும் படம் இந்தியன் 2

இந்தியாவில் நடக்கும் ஊழல் இதை தடுக்க முயற்சிக்கும் சித்தார்த் மற்றும் அவர் நண்பர்கள் இதற்காக come back india endru ashtang மூலம் இந்தியா விட்டு வெளியேறிய இந்தியன் தாத்தா சேனாபதியை மீண்டும் வர வைக்கிறார்கள்.இந்தியா வரும் சேனாபதி கருத்து முதலில் உங்கள் வீட்டில் நடக்கும் அசுத்தங்களை நீங்கள் வெளியேற்றுங்கள் பின் நாட்டில் நடக்கும் நடக்கும் அசுத்தத்தை சுத்தம் செய்வோம் என்கிறார்.அதன் படி இளைஞர்கள் வீட்டில் அதாவது தன் பெற்றோர்கள் செய்யும் தவறுகளை அரசாங்கத்துக்கு சுட்டி காட்டி பெற்றோர்களுக்கு தண்டனை வாங்கி தருகிறார்கள். அதே போல தன் அப்பா மிக சிறந்த நேர்மைவாதி என்று நினைக்கும் சித்தார்த் ஆனால் அவர் அப்பாவும் ஒரு ஊழல்வாதி என்று தெரிந்த பின் அவரை போலீஸ்யில் பிடித்து கொடுக்கிறார் இதனால் அவர் அம்மா தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அவரின் உறவினர்கள் அவரின் அம்மா உடலை பார்க்க மறுக்கிறார்கள் தன் அம்மா முகத்தை இறுதியில் பார்க்கமுடியவில்லை என்ற கோவம் இந்தியன் தாத்தா சேனாபதி மேல் திரும்ப என் அம்மாவின் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல சமூக வலை தளங்களில் go back india endra hashtag பதிவு செய்கிறார் இதன் மூலம் அனைவரும் go back india என்று பதிவிடுகிரார்கள் இதனால் ஏற்கனவே போலீஸ் செனாபதியை தேடி கொண்டு இருப்பார்கள் அதே சமயத்தில் பொது மக்களும் அவர் மேல் வெறுப்பில் துரத்துவார்கள் இவர்களிடம் இருந்து எப்படி தபிக்கிரார் என்பது தான் மீதி கதை
கமல்ஹாசன் முழு படத்தையும் தாங்கி பிடித்து இருக்கிறார்.என்று சொன்னால் மிகையாகாது மீண்டும் அவரை இந்தியன் தாத்தாவாக பார்க்கும் போது அதே அரவாரம் தான் உள்ளது இதில் மேலும் சிறப்பாக செய்துள்ளார்.இந்த பாகத்தில் வர்மா கலையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார் கமல்ஹாசன்.

யூ டூபராக வரும் சித்தார்த் ஒரு துடிப்பான இளைஞராக வலம் வந்து இருக்கிறார். லஞ்சத்தை எதிர்த்து போராடும் போதும் சரி தன் தாயின் மரணத்துக்கு தான் தான் காரணம் என்று அழும் காட்ச்யுளும் நம்மை நெகிழ செய்கிறார்.

பிரியா பவானி ஷங்கர் ஜெகன் ரிஷிகாந்த் சமுத்திரகனி,பாபி சிம்ஹா ஆகியோரும் அவர்களின் பங்கை மிக சிறப்பாக நடித்துள்ளனர்.

 

அனிருத் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது அதே போல ரவிவர்மன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்

சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல கதையம்சம் கொண்டபடமாகவும் அதே நேரத்தில் ஷங்கரின் பிரமாண்டமும் நம்மை மிரட்டியுள்ளார்.

மொத்தத்தில் இந்தியன் 2 பிரமிப்பு