full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இந்தியன் 2 ப்ரோமோஷன்

இந்தியன் 2 ப்ரோமோஷன்

தமிழ் சினிமாவின் சரித்திரம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் என்று சொன்னால் மிகையாகாது அதற்கு காரணம் இந்த சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவரின் சாதனைகள் மட்டுமே சாட்சி உலக சினிமாவை புரிந்து அதை நம் தமிழ் சினிமாவில் புகுத்தி அதில் மிக பெரிய வெற்றிகளை கண்டவர் கமல்ஹாசன்.

கமஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகள் முன் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் தான் இந்தியன் அன்று உலக சினிமா இந்த படைப்பை பார்த்து பிரமித்து போனது இந்த பிரம்மிப்பு படைப்பின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது.இதனாலே இந்த இந்தியன் 2 படத்திற்கு மிகவும் ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த பலர் இந்த படத்தில் இல்லை கமல்ஹாசன் மற்றும் ஒரு சிலர் தவிர இந்த இரண்டாம் பாகத்தில் சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் பிரியா பவானி ஷங்கர்,விவேக்,காஜல் அகர்வால்.பாபி சிம்ஹா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாகிறது .

தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது இந்த பல மொழிகளில் வெளியாகிறது இதனால் படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஊராக சென்று ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள் அந்த வகையில் லைகா தயாரிப்பு நிறுவனம் இத படத்தில் விளம்பரங்கள் இதுவரையாரும் செய்யாத அளவுக்கு வித்தியாசமாகவும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சிலநாட்களாக இந்த படத்தின் விளம்பரங்கள் வான் வழியாக விளம்பர படத்தி அனைவரையும் வியப்படவைத்துள்ளனர் துபாயில் இந்த படத்தின் விளம்பரங்கள் நம்மை வியக்கவைக்கும் அளவுக்கு செய்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் குதித்து வருகின்றனர் இவர்கள் செய்யும் புதுமைகளை கண்டு ரசிகர்கள் எப்போது ஜூலை 12ம் தேதி வரும் படம் எப்ப வெளியாகும் என்று காத்திருக்க வைத்துள்ளனர்.