இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் ‘இன்று நேற்று நாளை’!

News

2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் “இன்று நேற்று நாளை’. சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

மேலும், இப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக தயாராகியிருந்தது. டைம் மெஷினில் கடந்த காலத்திற்க்கு போவது, மியா குழந்தையாக பிறப்பதை அவரே பார்ப்பது, விஷ்ணு கடந்த காலத்திற்குச் சென்று நகை வாங்கப்போகும் போது நடக்கும் குழப்பம் போன்ற காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அப்படத்தின் நிறுவனமான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் அறிவித்துள்ளது.

முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

இப்படத்தின் நாயகனாக விஷ்ணு விஷால் அல்லது ஆர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.