
விஜய் மில்டன் – தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமை, 37 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு, மற்றும் 8 திரைப்படங்களை இயக்கி, மிக சிறந்த திரைக்கலைஞராக வலம் வருபவர். மிக வித்தியாசமான கதைக்கரு, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைக்கதை, கண்களை கவரும் உருவாக்கம் ஆகியவற்றில் வித்தகராக நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளவர். தற்போது அவர் அடுத்ததாக இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறார். கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B பங்கஜ் போரா மற்றும் Infiniti Film Ventures சார்பில் S.விக்ரம் ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், கேப்டன் விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பு வேடத்தில் இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்.

