full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம்

இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம்

சந்தானம் நகைச்சுவைக்கு நாயகன் என்று தான் சொல்லணும் ஆம் நகைசுவை நடிகராக வளம் வந்து இன்று நாயகனாக வெற்றிகரமாக வளம் வருகிறார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நகைசுவை நடிகர்கள் ஹீரோ என்ற கம்பளம் விரித்தது பலர் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அதில் மிக பெரிய வெற்றியை தழுவி தொடர்ந்து பல படங்களை நமக்கு ஹீரோ வாக கொடுத்து வருகிறார். அதற்க்கு முக்கிய காரணம் அவரின் கதை தேடல் தமக்கு என்ன வரும் என்று உணர்ந்து அதை மிக சிறப்பாக தொடுருவதே அவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு. அதன் வரிசையில் இன்று இங்க நாங்க தான் கிங் படத்தின் மூலம் மீண்டும் நம்மிடம் நெருங்குகிறாரா இல்லை நம்மை விட்டு விளக்குகிறார் என்று பார்ப்போம் .

இங்கு நான் தான் கிங் இந்த படத்தில் சந்தானம்,பிரியாலயா,தம்பி ராமைய்யா,பாலசரவணன்,விவேக் பிரசன்னா,சாமிநாதன் மாறன்,சேசு மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் கோபுரம் பிக்சர்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் இங்க நாங்க தான் கிங்

சரி கதைக்குள் போகலாம்… பெற்றோர்கள் யாரும் இல்லாமல் தனித்து வாழும் நாயகன் சந்தானம் இவருக்கு கல்யாணம் பண்ணவேண்டும் என்ற ஆசையில் கடன் வாங்கி ஒரு வீடு வாங்கி இருப்பார். இந்த வீட்டின் மேல் இருபத்திஐந்து லட்சம் கடன் இருக்கும் இதனால் ஒரு பணக்காரா பெண்ணாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார். ஆனால் ஜமீன்தார் பெண் என்று பிரியாலயா அவரை திருமணம் செய்கிறார் அனால் அவர் ஜமீன்தார் தான் அவரின் அப்பா தம்பி ராமைய்யா ஊரை சுற்றை கடன் வாங்கி இருப்பார் தன பெண்ணுக்கு திருமணம் பண்ண வேண்டும் என்று சந்தானத்துக்கு ஏமாற்றி திருமணம் செய்து விடுவார்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் தன்னை ஏமாற்றி விற்றார்கள் என்று தெரிய வருகிறது இருந்தும் தன் மாமனார் மற்றும் மச்சான் இருவரையும் தன கூடவே இருக்க வைக்கிறார். ஆனால் இவர்களால் இவருக்கு எப்பவும் பிரச்னை இந்த சூழ்நிலையில் ஒரு பிரச்சனையால் கடன் கொடுத்த நண்பன் விவேக் பிரசன்னாவிடம் தம்பி ராமையாவும் பாலா சரவணனும் பிரச்னை செய்து விடுகிறார்கள் இதனால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடு என்று பிரச்னை செய்கிறார். இந்த கடனை கொடுத்தாரா இல்லை என்ன செய்தார் என்பது தான் மீதி கதை.

சந்தானம் நாயகனாக தொடரும் இங்க நாங்க தான் கின் படம் மூலம் மீண்டும் நானும் தமிழ் சினிமாவில் நானும் ஒரு கிங் என்று நிரூபித்து இருக்கிறார். படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக புரோக்கராக வரும் மனோபாலா இந்த இருவர் கூட்டணி மீண்டும் ஒரு ரசனை மிகுந்த காமெடியை கொடுத்து அரங்கத்தை அதிரவைக்கிறது அதே போல தம்பிராமையா பாலசரவணன் இந்த இருவருடன் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியில் நம்மை ரசிக்கவைக்கிறது.

நாயககியாக வரும் பிரியாலயா எதோ வந்தோம் போனோம் என்று இல்லாமல் தனக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார்.குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை ரசிக்க வைக்கிறார்.

படத்துக்கு மிக பெரிய பலமாக மாமனாராக வரும் தம்பி ராமைய்யா மற்றும் மச்சான் பாலா சரவணன் இந்த இருவர் கூட்டணி காமெடி படத்துக்கு பலம் குறிப்பாக கிளைமாக்ஸ் ஹாஸ்பிடல் காட்சிகல் நம்மை நம்மை சிரிக்கவைக்கிறார்கள் அதோடு படத்தில் விவேக் பிரசன்னா சாமிநாதன் மாறன் சேசு இவர்கள் பங்களிப்பும் மிக முக்கியமாக உள்ளது.

படத்தில் பாடல்கள் கொஞ்சம் சுமார் ரகம் தான் என்று சொல்லணும் படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை படத்தின் முக்கிய பலம் என்றால் அது இயக்குனர் ஆனந்த் நாராயணன் தான் அவரின் கதைக்களமும் சரி குறிப்பாக அவரின் திரைக்கதை தான் மிக பெரிய பலம் சந்தனம் பலம் தெரிந்து அதற்கு தேவையான ஒரு திரைக்கதை மூலம் நம்மை குதூகலப்படுத்தியுள்ளார். குறிப்பாக திருமண காட்சி அமைப்பும் சரி கிளைமாக்ஸ் காட்சியும் நம்மை அதிரவைக்கிறது.

மொத்தத்தில் இங்க நாங்க தான் கிங் நிச்சயம் நகைசுவை கிங் தான்.