full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஒரு கிடாய்க்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதையில், வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. படத்தை பார்த்த இந்திய வம்சா வழியினர் படக்குழுவை பாராட்டி இருக்கிறார்கள்.

நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் சார்ந்த `ஒரு கிடாயின் கருணை மனு’ தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தை பார்த்த சர்வதேச படக் குழுவினரும் தெரிவித்திருக்கின்றனர்.