டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்

Actors cinema news
0
(0)

டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனின் கதாபாத்திரம் சரவணனாக அறிமுகம்: கணவர், விஞ்ஞானி, கனவுகளைத் தேக்கி வைத்திருப்பவர் என சரவணன் தனக்கு வரும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்

ஒருவரின் அறிவுதான் விலைமதிப்பில்லாதது. இதை சரவணனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். திறமையான, விடாமுயற்சியுடன் போராடும் விஞ்ஞானியான அவரது முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது.

நெட்ஃபிலிக்ஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ’டெஸ்ட்’ திரைப்படத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவன் நடித்துள்ளார். மேதைமைக்கும் விரக்திக்கும் இடையிலான கோட்டில் பயணிக்கும் நபரை இந்த கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆர். மாதவனின் அன்பு நண்பரும், நடிகருமான சூர்யா, ’டெஸ்ட்’ படத்தில் மாதவனின் சரவணன் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சரவணன் தனது கனவை நனவாக்கப் போராடும்போது அந்த லட்சியம் நிறைவேற பல தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பயணம் விடாமுயற்சி, அறிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் சிலிர்ப்பூட்டும் கதையாக அமையும்.

நடிகர் ஆர். மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “சரவணன் ஒரு புத்திசாலி. இதுவே அவருடைய பலமும் சுமையும். சரவணன் தனது கனவை அடைய பல தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு அவர் தரும் விலை அதிகம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தனது கனவிற்காக ஒருவன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று வியந்து யோசித்தேன். போராட்டம், நம்பிக்கை மற்றும் மீண்டு வருதல் என ‘டெஸ்ட்’ பார்க்கும்போதும் பலரும் இதை தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்வார்கள். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

ஒருவனின் கனவு, லட்சியம் சோதிக்கப்படும்போது, அவன் எவ்வளவு தூரம் செல்வான்? சரவணனின் கதையை ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் பாருங்கள்.

*நடிகர்கள்:* ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்

*தொழில்நுட்பக் குழு:*

எழுத்து, இயக்கம்: எஸ். சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.