நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றாலே சிரிப்புதான் வரும்… அவர் காமெடி காட்சிகளை கொண்டு உருவாக்கிய மீம்கள் தற்போது உலக நடப்புகள் அனைத்திற்கும் பொருத்தமாக உள்ளன.
அவரது மீம்கள் தான் சமூக வலைதளத்தில் அதிக அளவில் உலாவருகின்றன
சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பா.ஜனதா சட்டசபை தேர்தலுக்கு முன் தனது பிரசார பீரங்கிகளை தயார்படுத்தி வருகிறது.அதற்காக தற்போது நடிகர் வடிவேலுவையும் பா.ஜனதாவில் இணைக்கப்போவதாக செய்திகள் உலாவருகின்றன் ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
ஏற்கனவே பா.ஜனதாவில் நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ளனர். கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.