full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பா.ஜனதாவில் இணைய உள்ளாரா சிவகார்த்திகேயன்?

பா.ஜனதாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரசாரத்துக்கு நடிகர், நடிகைகளை இழுக்க அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளன. ரகசிய தூதுகளும் அனுப்புகின்றன. ஏற்கனவே சில கட்சிகள் நடிகர், நடிகைகளை தங்கள் கட்சியில் இணைத்து பிரசார பயிற்சிகள் அளிக்க தொடங்கி உள்ளன. கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் கூட்டங்களை சேர்க்கவும் இவர்களை பயன்படுத்த உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை பா.ஜனதா கட்சிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாகவும் அவரும் அதில் சேருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. சட்டமன்ற தேர்தலில் சிவகார்த்திகேயனை பிரசாரத்துக்கு பயன்படுத்த அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது. இது குறித்து நடிகையும் பா.ஜனதா பிரமுகருமான காயத்ரி ரகுராம் கூறும்போது, “நடிகர் சிவகார்த்திகேயன் விரும்பினால் பா.ஜனதா கட்சியில் இணையலாம்” என்றார். இது பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் பா.ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் வதந்திதான், எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை” என்று மறுக்கப்பட்டது.