full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கலைஞருக்கு இசைஞானியின் அஞ்சலி!!

திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நேற்று முன்தினம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்கள்,அரசியல்வாதிகள்,திரைபிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே என, ஆஸ்திரேலியாவிலிருந்து இசைஞானி இளையராஜா வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

“டாக்டர் கலைஞர் ஐயா மறைந்த இந்த தினம் ஒரு துக்ககரமான தினம். அரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் தலைவர் ஐயா கலைஞர் அவர்கள். சினிமாத் துறையிலே சுத்தமான தமிழ் வசனங்களை மக்களுக்கு அள்ளி வழங்கிய கடைசி வசனகர்த்தா கலைஞர் ஐயா என்று சொல்லுமளவிற்கு அவர் எழுதியிருக்கிறார். அரசியலாகட்டும், கலையாகட்டும், தமிழாகட்டும்.. இலக்கியமாகட்டும், … எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய கலைஞர் ஐயா அவர்களின் இழப்பு உண்மையில் ஈடு செய்ய முடியாதது” என்று கூறியிருக்கிறார்.