தமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன இயக்குநர்கள் வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின் கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
கௌதம் மற்றும் தாராவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் வியக்கதக்க முறையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவர்களை தவிர மா கா பா ஆனந்த், பாலசரவணன் ஆகியோர் பிரதானப் பாத்திரங்களில் நடித்து படத்தின் நகைச்சுவை பகுதிக்கு மட்டுமின்றி, படத்தின் கதை ஒட்டத்திற்கும் பெரிதும் உதவுகின்றனர்.நாயகனின் தந்தையாக நடிக்கும் பொன்வண்ணன் சார் அவர்களும் மற்றும் ஒருமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் அவர்களின் கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவம் பெற்றது. ஒளிப்பதிவாளர் கவன்ராஜ் மற்றும் சாம் சி. எஸ். ஆகியோரின் ஒருகினணந்த பணிமூலம் இந்தப் படம் ரசிகர்களை பெருமளவில் கவரும். இது மற்றுமொரு காதல் கதையல்ல, காதலை பற்றிய கதை” என உற்சாகமாக கூறினார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.