full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இஸ்பேட் ராஜா இதய ராணிக்கு அனிருத் செய்த உதவி!

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சாதனை சிலரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தான் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நேரடி உதாரணமாக செயல்படுகிறார். அவர் அனைத்து பாடல்களில் தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார்.

அனைத்து வகைகளிலும் பாடல்களைப் பாடுபவர் என்று அறியப்படும் அனிருத், தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள் இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்துக்காக ‘கண்ணம்மா’ என்ற ஒரு இனிமையான மெலோடி பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்.

படக்குழுவினர் நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனிருத்தை அணுகினர். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த பிடிவாதமான காதல் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் ஜோடியாக நடிக்க, நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பால சரவணன் காமெடியில் கலக்குகிறார்கள். இந்த அழகான காதல் கதையை “புரியாத புதிர்” புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க, மாதவ் மீடியா சார்பில் ல் பாலாஜி கப்பா தயாரித்திருக்கிறார்.