இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்:
விண்வெளிக்கலன் செலுத்தப்படும்போது குதூகலத்துடன் அதைப் பார்க்கும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே விண்வெளி ஆராய்ச்சிக்கனவு சாத்தியப்படுகிறது. அக்கனவை இளைய தலைமுறையினரிடம் ஊக்கப்படுத்தவும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தைக் கொண்டாடும் வகையிலும் இஸ்ரோ பாடல் பா மியூசிக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல், விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளைச் பற்றிச் சிறார்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மதன் கார்க்கியின் வரிகளுடன், விண்வெளி ஆராய்ச்சியின் பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இப்பாடல், இளைய தலைமுறையினர் இஸ்ரோவைப் பார்த்து, விண்வெளிக் கண்டுபிடிப்புகளில் தங்கள் சொந்த கனவுகளைக் காணத் தூண்டுகிறது. ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து, தீபக் ப்ளூ பாடிய இந்தப் பாடலை மதுரை குயின் மீரா பள்ளியைச் சேர்ந்த அபிநாத் சந்திரன் தயாரித்துள்ளார். விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளால் ஈர்க்கப்பட வேண்டும் என்று இளைஞர்களை ஊக்குவிக்கும் இஸ்ரோ பாடலை இப்போது பாமியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்.
பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/eeFIvvZ6MDM
**
*ISRO Space Anthem Released to Celebrate India’s Space Exploration Journey:*
The newly released ISRO Space Anthem celebrates the inspiring achievements of India in space exploration. Penned by Madhan Karky, the lyrics reflect the pride and joy of India’s advancements in space science, aiming to motivate the younger generation to aspire toward careers in science and discovery, inspired by ISRO’s trailblazing journey. Composed by Jerard Felix and performed by Deepak Blue, the anthem is produced by Abhinath Chandran of Queen Mira School, Madurai, and has been released on the Paa Music YouTube channel. With its powerful message of pride, joy, and ambition, the anthem seeks to inspire young minds to dream big and explore new frontiers. The ISRO Space Anthem is now available on PaaMusic YouTube channel.
Song link 🔗 https://youtu.be/eeFIvvZ6MDM