ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்

General News News
0
(0)

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்

சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பசித்தவர்களுக்கு ருசியான உணவை வழங்குவதற்காக ‘மொய் விருந்து’ எனும் உணவு வழங்கும் பயணத்தை ஒருங்கிணைத்தது. இதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவரும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் – நாள்தோறும் பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்கி வருகிறது. இந்த வகையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சேவையை மேற்கொண்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் … உலக உணவு நாளை முன்னிட்டு, ‘மொய் விருந்து’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ருசியான மற்றும் சுவையான உணவளிப்பதற்காக உணவு பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்டுதோறும் இது போன்ற மக்கள் நல திட்டங்களில் கலந்து கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊக்கமளித்து வரும் இதன் விளம்பர தூதுவரான ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த ஆண்டும் இந்த ‘மொய் விருந்து’ பயணத்தில் கலந்து கொண்டார்.‌ இவருடன் இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று ருசியான உணவை வழங்கும் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஹெல்ப் ஆன் ஹங்கர் – ஐஸ்வர்யா ராஜேஷ் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – ஆகியோர் இணைந்து முன்னெடுத்து இருக்கும் இந்த நிகழ்வு.. பசியால் வாடும் மக்களின் மனதை கவர்ந்ததுடன்… இணையவாசிகளின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.