full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ .

சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ .
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில்,சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார்.
மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு மே16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி கொடைக்கானல்,தேனி,காரைக்குடி,கோபிசெட்டிபாளையம்,பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது..

தயாரிப்பு : தாய் சரவணன்
எழுத்து, இயக்கம் : சுசீந்திரன்
இசை : D.இமான்
ஒளிப்பதிவு : விஜய் k. சக்கரவர்த்தி
எடிட்டர் : ஆண்டனி
ஆர்ட் டைரக்டர் : K.உதய குமார்
பாடல்கள் : யுகபாரதி
நடனம் : ஷோபி
ஸ்டண்ட் : ஸ்டன் சிவா
காஸ்ட்யூம் டிசைனர் : ராதிகா சிவா
டிசைன்ஸ் : ட்யூனி ஜான்
இணை தயாரிப்பு : கார்த்திக்.