சினிமா சூட்டிங்கின் போது வெள்ளத்தில் மூழ்கி ஜாக்கி சான் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டார்.
66 வயதாகும் ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாறு வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் மியா முகி இருவர் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் வெள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கினார். முகி உடனடியாக மீண்டும் தோன்றினார். ஆனால் சுமார் 45 விநாடிகள், ஜாக்கி சான் எங்கும் காணப்படவில்லை. உடனடியாக தண்ணீரில் குதித்த ஜாக்கி சானின் பாதுகாவலர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு
சேர்த்தனர். இந்த பரபரப்பான காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.விபத்தினை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்ட போதும், சிறிது நேர ஓய்விற்கு பின் மீண்டும் அதே காட்சியில் நடித்து அசத்தினார் ஜாக்கி.நீண்ட இடைவேளிக்கு பிறகு வெளியாக இருக்கும் ஜாக்கியின் வேன்கார்டு திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிகிறது. இதனிடையே விபத்து குறித்து பேசிய ஜாக்கி சான், ‘ அது சாதாரணமான ஒரு காட்சி தான்.
ஆனால் கிட்டத்தட்ட நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டேன். ஸ்கூட்டர் கவிழ்ந்ததால் நீருக்கு அடியில் சிக்கிக் கொண்டேன். என்ன நடந்தது என்று கூட நினைவில்லை.ஏதோ ஒரு சக்தி ஒன்று என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன்.முழு மூச்சில் ஸ்கூட்டரைத் தள்ளியதால் என்னால் வெளிவர முடிந்தது.’ என கூறினார்.