full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்

நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும்   “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார் !

நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பற்றிய ஒவ்வொரு செய்தியும், மிகப்பெரும் ஆச்சர்யங்களையும், பெரும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த  நிலையில், தற்போது ரசிகர்களின்  கனவு நாயகி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்  “விக்ராந்த் ரோணா” படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மிக சமீபத்தில், நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்கள் திரைத்துறையில் நுழைந்து  25 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில்   “விக்ராந்த் ரோணா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் கொண்ட   ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பிரமாண்டமாக வெளியிடபட்டது. இந்நிகழ்வு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பாலிவுட் முன்னணி நாயகி இப்படத்தில் பங்கு கொள்வது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்  கூறியதாவது…
உலகிற்கு  தனித்துவமான, ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பும், ஒரு கனவுப்படைப்பு தான் “விக்ராந்த் ரோணா”.  இதுபோன்ற ஒரு மகத்தான படைப்பின் உருவாக்கத்தில் நானும் இணைந்ததில்  மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன்.  திரையரங்குகளில் மீண்டும் கோலாகல கொண்டாட்டத்தை, உருவாக்கும் படமாக இப்படம் இருக்கும்.

படத்தின் மிக முக்கியமான ஒரு நடன காட்சித்தொகுப்பு,  6 கோடி பொருட்செலவில், மிகப்பிரமாண்ட அரங்க அமைப்பில், 300 நடன கலைஞர்கள் பங்களிப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் அமைத்திருக்கும் இந்த நடன காட்சி, இந்த வருடத்தின் மிகப்பெரும் டான்ஸ் நம்பராக புகழ் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. மேலும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் தமிழ் பதிப்பில் தனது சொந்த குரலில் பேசும் முயற்சியில் உள்ளார்.

பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும்  “விக்ராந்த் ரோணா”  திரைப்படம்,  3-D பதிப்பில்,  14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே ஜி எஃப் படப்புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார்.  கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக்  மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்