full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை மார்க்ரெட் நோலன். லண்டனில் வசித்து வந்த இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. மார்க்ரெட் நோலன் மாடலிங்காக வாழ்க்கையை தொடங்கி 1960-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1964-ல் வெளியான கோல்டு பிங்கர் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து பிரபலமானார். ‘எ ஹார்ட் டேய்ஸ் நைட்’, ‘த பியீட்டி ஜங்கில்’, ‘திரி ரூம்ஸ் இன் மன்ஹாட்டன்’, கேர் ஆன் கவ் பாய், டுமாரோ, கேரி ஆன் ஹென்றி, ஸ்கை பண்டிட், பெர்ரி கிராஸ் த மெர்சி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார்.

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மார்க்ரெட் நோலன் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவிதுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் நடிகைகள் கெல்லி பிரஸ்டன், ஒலிவியா, டயானா அரிக் ஆகியோர் மரணம் அடைந்தனர். கொரோனா காலத்தில் ஹாலிவுட் நடிகைகள் தொடர்ந்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.