full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

ஜாங்கோ-movie review

தமிழ் சினிமாவில் முதல் டைம் லூப் திரைப்படம் ஜாங்கோ ,டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் எரிக்கல் ஒன்று விழுவதை பார்க்கிறார். இதைப் பார்த்ததிலிருந்து டைம் லூப்பில் மாற்றிக் கொள்கிறார்.அதாவது, அவரது வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது. இந்நிலையில் மனைவி மிருணாளினி ரவியை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். இதை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சதீஷ்குமார் தனது மனைவி மிருணாளினி ரவியை காப்பாற்றினாரா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விமர்சனம்

நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கவலை, வெறுப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி மிருணாளினி ரவி துணிச்சல் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார்.போலீசாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன்.

முதல் பாதி திரைக்கதை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், இரண்டாம் பாதியில் தெளிவுபடுத்துகிறார். இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால், கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.