full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜவான் திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது!

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதிலும் இந்த சாதனையை மிக வேகமாக படைத்திருக்கும் படமும் இதுதான். இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது

 

 

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வசூல் புள்ளி விவரங்களுடன், புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பெரிய திரையில் வியக்கத்தக்க அளவில் காண்பிக்கப்பட்டிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சாகசத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு.. வேறு வெளியீடுகளுடன் போட்டியிட்டாலும், இதன் வலுவான வசூலை அற்புதமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெரும் கூட்டத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

 

இந்தி திரையுலக சந்தையில் ஜவான் திரைப்படம்- வெளியான ஆறாம் நாளன்று 24 கோடி ரூபாயை வசூலித்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளுடன் சேர்த்து திரைப்படத்தின் ஆறாவது நாள் வருவாய் 26.52 கோடி ரூபாய். இந்த வசூல் மூலம் ஜவானின் இந்தி திரையுலக வசூல் மட்டும் 306.58 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் இந்தி மற்றும் பிற மொழிகளில் மொத்த வருவாயை கணக்கில் கொண்டால்.. ஆறாவது நாளில் இத்திரைப்படம் 345 கோடியே 60 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது. இந்த சாதனையின் மூலம் ஷாருக்கான் நடித்த படம் இந்தியில் மட்டும் வெளியான ஆறு நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.‌ அதிலும் மிக வேகமாக இந்த வசூலை கடந்த திரைப்படம் என்ற சாதனையும் ‘ஜவான்’ படைத்திருக்கிறது. 

 

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.