சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை காலை 9 மணியளவில் முன்னாள் எம் பி ஜே கே ரிதிஷ் நேரில் சந்தித்து பேசினார்.
ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த ஜே. கே. ரிதீஷ் :-
நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது இல்லை என மறுத்தவர், நடிகர் சங்க தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும், விசால் கால தாமதம் படுத்தி வருகிறார்…
நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் தேர்தல் நடத்த போவதாக விசால் சொல்வது நடை முறைக்கு சாத்தியம் இல்லை என கருத்து தெரிவித்தவர்.
ஆரம்பத்தில் விசாலை நான் உட்பட அனைவரும் ஆதரித்துவந்தோம், ஆனால் விசால் தனக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக நாமக்கல் நடிகர் சங்கத்தின் ஒட்டு மொத்த ஒட்டு உரிமையை நீக்கம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டியவர்,விசால் பதவி ஏற்ற ஒரு வருடத்தில் எந்த முன்னேற்ற நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பதவி விலகுவதாக கூறியதை சுட்டிகாட்டினார்.
ரஜினி கமலில் இருவரில் யாருக்கு திரை துறையை சார்ந்தவர் என்ற அடிப்படையில் ஆதரவப்பீர் என்ற கேள்விக்கு, என்னுடைய ஆதரவு எப்போதுமே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆன அரசுக்கு மட்டும் தான் மேலும் நடிகர் சங்கம் பொறுத்தவரை கட்சி பேதம் இல்லாமல் அனைவரும் இணைந்து குடும்பமாக செயல்படுவோம் என பதில் அளித்தார்.