புதுமையான கேங்ஸ்டர் கதையாக, ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” பட டிரெய்லர் !!!

cinema news
0
(0)

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் டிரெய்லரில் கதைக்கு அவர் வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார்.
டிரெய்லரில் படத்தின் காட்சியமைப்புகளும், நடிப்பும் ஒரு அழுத்தமிகு தரமான படைப்பாக ‘பரோல்’ இருக்குமென்பதை உறுதி செய்திருந்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது…
“பரோல்” படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் எங்கள் குழுவினரின் பெரும் கனவு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும் ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதை தான் இது.  தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்குள் உள்ள பிரச்சனையும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம். இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை ஆனால் வலுவான ஆக்சனும் பரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும். இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார்.  படம் முடித்தவுடனே அவரிடம் காட்டினேன், படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் குரல் தந்தால் நன்றாக இருக்குமென்றேன், உடனடியாக ஒப்புக்கொண்டு அவரின் கடின வேலைகளுக்கிடையில் செய்து தந்தார் அவருக்கு பெரிய நன்றிகள். இப்படத்தின் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் மிகப்பெரிய தூணாக இருந்து உழைத்துள்ளார்கள், அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும் புதுமையான படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும்.
R S கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு
இயக்குனர் – துவாரக் ராஜா
தயாரிப்பாளர் – மதுசூதனன்
இசையமைப்பாளர் – ராஜ் குமார் அமல்
ஒளிப்பதிவாளர் – மகேஷ் திருநாவுக்கரசு எடிட்டர் – முனீஸ்
கலை இயக்குனர் – அருண் குமார்.A
செயல் – ஓம் பிரகாஷ் S.D
ஆடை வடிவமைப்பாளர் – அகிலன் ராம்
டிஐ – ப்ரிசம் & பிக்சல்கள் Prism & Pixels
இன்ஹவுஸ் பப்ளிசிட்டி – லக்ஸ் என்டர்டெயின்மென்ட்
இசை பார்ட்னர் – ட்ரெண்ட் மியூசிக்
விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜெகன்
டப்பிங் – ஜி ஸ்டுடியோஸ்
ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்.K (ரெசனன்ஸ் ஸ்டுடியோ)
மிக்சிங் – RT ஸ்டுடியோஸ்

இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.