தயாரிப்பாளர் சபரிஷ் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார் – கலைப்புலி எஸ்.தாணு
\இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது,
“எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.
சுப்பிரமணிய சிவா பேசும்போது,
‘இந்த செல்ஃபி படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றிருப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார் தான். மேலும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம் செல்ஃபி. சாதாரண மனிதனுக்கு கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக பேசப்பட்ட படம். கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதை இப்படம் பேசியது. பசியை போக்குவது தான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள் அதற்கும் நன்றி. இயக்குனர் மதிமாறன் அடுத்தப்படத்தை இன்னும் மிகச்சிறப்பாக தருவார். மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர். குணாநிதி மிகவும் நல்ல பையன். சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார். பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும். ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார். நன்றியுணர்வு தான் எல்லா உணர்வுகளுக்கு தாய். அந்த நன்றியை உங்களிடம் சொல்கிறோம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் செட்டிலாக நடித்திருந்தார். அவர் சிரித்தால் அழகாக இருக்கும். அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும். கவுதம் மேனன் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்” என்றார்.
வர்ஷா பொல்லம்மா பேசும்போது,
நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது,
இயக்குனர் மதிமாறன் பேசும்போது,
ஜிவி பிரகாஷ் பேசும்போது,
கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது,
ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது” என்றார்.