full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜோதிகாவின் பாராட்டைப் பெற்ற இளம் தேவதை

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில், ஜி வி பிரகாஷ் காதலியாக, கர்ப்பிணியாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இவானா.

இது குறித்து அவர் பேசிய போது, “எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள சங்கனஞ்சேரி. அப்பா வியாபாரம் செய்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். என்னுடைய சொந்த பெயர் அல்லினா. சினிமாவுக்காக இவானா ஆக்கினார்கள். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். எனக்கு வயது 17. இப்போது பிளஸ்-2 படிக்கிறேன். என் தம்பியும் சினிமாவில் நடித்திருக்கிறான்.

மலையாளத்தில் பிரித்விராஜ், சசிகுமார் நடித்த ‘மாஸ்டர்ஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனேன். அடுத்து 3 மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.

நான் சின்ன பொண்ணு. நாச்சியார் படத்தில் கர்ப்பிணியாக நடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. பாலா மிகவும் சப்போர்ட்டாக இருந்து சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். படத்தில் என்னையும், ஜி வி பிரகாசையும் போலீஸ் பிடிக்கும் போது நான் அழும் காட்சியில் மிகவும் ஒன்றி நடித்தேன். அப்போது ஜோதிகா மேடமும், ஜி வி பிரகாசும் அங்கேயே மனம் திறந்து பாராட்டினார்கள். சூர்யா-கார்த்தியின் அப்பா சிவகுமார் சார் என்ன ‘இளம் தேவதை’ என்று பாராட்டி அறிக்கை விட்டதை மறக்க முடியாது. என்னை வீட்டில் என் தம்பி உள்பட எல்லோரும் பாராட்டினார்கள்.

பாலா சார் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை நடிப்பவர்களிடம் இருந்து வெளியே கொண்டு வந்து விடுவார். அவரிடம் தேசிய விருது வாங்கியவர் என்ற பந்தா கிடையாது. எளிமையாக இருப்பார். நயன்தாரா, நஸ்ரியாவை மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்