ஜுலியின் அரசியல் ஆசை

News

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜுலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பரபரப்பானார். தொடக்கத்தில் ஜுலி மீது இருந்த நல்ல பெயர் எல்லாம் தலைகீழாக மாறியது.

ஜுலியை வளர்த்த சமூக வலைதளங்களே அவரை காட்டமாக விமர்சிக்கத் தொடங்கியது. டிவி காம்பயரிங், சினிமா என்று அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். திடீரென்று நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோவில் தான் விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு பற்றியெல்லாம் சொல்லிவிட்டு தான் விரைவில் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லி முடிக்கிறார். அவரது உதட்டசைவை வைத்து அது அரசியல் கட்சி தான் என்று அவரை கிண்டலடித்து வருகிறார்கள். நாம் விசாரித்த வகையில் ஜுலிக்கு அரசியல் ஆசை இருக்கிறது.

ஆனால் தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார். கமல் கட்சியில் சேரத் தான் முயற்சிக்கிறார். இது ஏதோ இயக்கத்துக்கான விளம்பரம் போல உள்ளது என்கிறார்கள்.