full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

ஜுலை காற்றில் விமர்சனம் 3.45/5

நாயகன் ஆனந்த் நாக் படத்தின் ஹீரோவாக கச்சிதமாக பொருந்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அவ்வளவாக இல்லாததால், முழுப்படமும் இவரை மட்டுமே சுற்றி நடக்கிறது. ஷ்ரேயா & ரேவதியுடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார். அழகிலும் தான். நிச்சயம் கல்லூரி பெண்களின் கனவு நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருவார்.நாயகன் ஆனந்த் நாக் ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணி புரிகிறார். தனது நண்பன் திருமணத்திற்கு செல்லும் ராஜீவ், அங்கு வரும் நாயகி ஷ்ரேயா(அஞ்சு குரியன்)வை காண்கிறார். பார்த்ததும் நண்பர்களாகி விடுகின்றனர். பின், நட்பு காதலாக மாறாக, இருவரின் வீட்டு சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்ட நிலையில், ராஜீவ் ஷ்ரேயாவுடன் ஒரு காதல் பிடித்தம் இல்லை என கூறி, திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஷ்ரேயாவுன் பிரேக் அஃப் செய்து விடுகிறார்.

பின், அடுத்த நாயகி ரேவதி(சம்யுக்தா மேனன்)யை பார்த்ததும் ராஜீவிற்கு காதல் மலர்கிறது. ஏற்கனவே பிரேக் அஃப் ஆகி தனிமையில் இருக்கும் ரேவதிக்கு ராஜீவும் ஆறுதலாக இருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. போட்டோகிராபியில் சாதனை புரிய நினைக்கும் ரேவதி, தனது வேலையில் மும்முரமாக இருக்கிறார். இதனால், இருவருக்கும் அவ்வப்போது சண்டை வர, வாழ்க்கைக்கு என்று வந்தால் ராஜீவ் சரியாக இருக்கமாட்டார் என, பிரேக் அஃப் என கூறி விடுகிறார் ரேவதி.

தனிமையில் நிற்கும் ராஜீவ் அடுத்ததாக எடுக்கும் முடிவு என்ன..?? காதலை சரியாக புரிந்து கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

 

 

நாயகியாக வரும் அஞ்சு குரியன் மற்றும் சம்யுக்தா மேனன் இருவரும் கதைக்கேற்ற பொருத்தம் தான். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் குறைவில்லாமல் மிளிர்கின்றனர். நாயகனுடனான கெமிஸ்ட்ரி இருவருக்குமே நன்றாக வேலை செய்துள்ளது. சம்யுக்தா மேனன் க்ளாமருக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார். ஹோம்லி கேர்ளாக வந்து மொபைலின் டிபி’யாக ஒட்டிக் கொள்கிறார் அஞ்சு குரியன்.

சதீஷின் காமெடி அவ்வப்போது மட்டுமே எடுபடுகிறது. ஜோஸ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னனி இசை ரகம்.

சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு கலர்புல். படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்தால் காதலை இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். காட்சிகள் எடுத்த விதத்திலும், காதலை கூறிய விதத்திலும் இயக்குனராக நிமிர்ந்திருக்கிறார் கேசி சுந்தரம்.

ஜூலை காற்றில் – காதலின் காதல் வீசும் படம்…….