தற்போதைய அரசியலைப் பிரதிபலிக்கும் காலா?

News

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹூமாகுரேஷி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ரஜினி ஜோடி ஈஸ்வரி ராவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ‘காலா’ படத்தில் ஹூமாகுரேஷி பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இது இந்த படத்தின் முக்கியமான பாத்திரம். ஹூமா குரேஷிக்கு அழுத்தமான வேடம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

‘காலா’ படத்தில் அரசியல் தொடர்பாக வசனங்களும் இடம் பெறும். அது இன்றைய கால கட்டத்தைப் பிரதிபலிக்கும் ரஜினியின் கருத்துக்களாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.