full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காவியனுக்கு போட்டியாக “சர்கார்”!

“2 M சினிமாஸ்” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் “காவியன்”.

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் “அமெரிக்காவின் சூதாட்ட நகரம்” என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும்.

இரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி “காவியன்” படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

அதனாலேயே “காவியன்” படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“காவியன்” படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்க்கார்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.