full screen background image
Search
Saturday 21 September 2024
  • :
  • :
Latest Update

கடைசி உலக போர் – திரை விமர்சனம் – 3.5/5

கடைசி உலக போர் – திரை விமர்சனம் – 3.5/5

நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, நாசர்,நட்ராஜ், ஆத்மிகா , மற்றும் பலர்

ஒளிப்பதிவு : அர்ஜுன் ராஜா

இசை மற்றும் இயக்கம்: ஹிப் ஹாப் ஆதி

தயாரிப்பு:ஹிப் ஹாப் தமிழா என்டர் டயமண்ட்.

ஹிப்ஹாப் ஆதி இசையிலும் நடிப்பிலும் ஏற்கனவே கலைக்கி உள்ளார்,புதிய அவதாரம் தயாரிப்பில் இறங்கி உள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி எப்போதும் இந்த தலைமுறை ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான ஒரு கதையை எடுத்து அதில் ஹிட்டும் அடிப்பார், இந்த முறை கொஞ்சம் இல்லை ரொம்ப சீரியஸாக எடுத்துள்ள களம் தான், கடைசி உலகப்போர், எப்படி என்பதை பார்ப்போம்……….2028-ல் கதை தொடங்குகிறது, நட்டி தமிழக முதலமைச்சர் மச்சான் மற்றும் பினாமி, இவர் தான் இந்த ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல் ஒரு கிங் மேக்கர் ஆக இருக்கிறார். உலகமே தற்போது இரண்டாக பிரிந்துள்ளது.

ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிய, இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது, இந்த நேரத்தில் முதலமைச்சர் மகள் ஆத்மிகா அறிமுகம் கிடைத்து அவரை காதலிக்கவும் தொடங்குகிறார்.

இந்த நிலையில் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்க, அதை வெளியே எடுக்க நட்ராஜ் ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி செல்ல, ராணுவம் களம் இறங்கி தமிழகத்தை கைப்பற்றுகிறது. ஆதியை தீவிரவாதி லிஸ்டில் சேர்கின்றனர்.

இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க ஆரம்பிக்க, மொத்த சென்னையையும் அழிக்கின்றனர், அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ஹிப்ஹாப் ஆதி உலகப்போர் அளவுக்கு சிந்தித்து இந்த கதையை உருவாக்கி தான் மட்டுமே இதை சுமக்க வேண்டும் என்று இல்லாமல், படத்தின் செகண்ட் ஹீரோ போல் தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என்கிற நட்டி தான்.

இவர் தான் கதையே சொல்லி படத்தை தொடங்குகிறார், ஆரம்பத்தில் உலகம் எப்படி தோன்றியது என இவர் சொல்லும் கதையே நம்மை படத்திற்குள் கொண்டு வருகிறது. தான் ஒரு கிங் மேக்கர் என அவர் எடுக்கும் முட்டாள்தனமே படத்தின் கதையாக நீள்கிறது.

பாம் வெடிக்கும் காட்சிகள் மிகவும் சிறப்பாகவேயுள்ளது கிராபிக்ஸ் நன்றாகவே அமைந்துள்ளது  என்ன வெடி சத்தம் கொஞ்சம் ஓவர்.

கடைசி உலகப் போர் நிஜமில்லை.