கடுகு படத்தில் நடித்த சுபிக்ஷா, இப்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்கிறார். இது பற்றி கூறிய அவர்…
“இந்த படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாக நான் நடிக்கிறேன். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகு நான் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படம். குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன்.
இந்த படத்துக்கு ஒப்பந்தமான பிறகுதான், பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த ‘தாரை தப்பட்டை’ படம் பார்த்தேன். அதில் அவருடைய அதிரடியான நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். அவருடன் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயத்துடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.
ஆனால் நிஜத்தில் அவர் மென்மையானவராக இருந்தார். அன்பாக பேசினார். இதனால் அவரைப்பற்றி எனக்கு இருந்த பயம் முழுமையாக நீங்கியது. இப்போது இயல்பாக நடிக்கிறேன்” என்றார். பெரியகுளம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.