full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வெளியான தகவலால் கடுப்பான காஜல்

தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால்.

இவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது.

இப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியது.

இதை மறுத்துள்ள காஜல் அகர்வால், “நான் ஏன் அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகேற்ற வேண்டும்? எனக்கு அப்படி ஒரு தேவை ஏற்படவே இல்லை. நான் உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். இதுவே என் அழகின் ரகசியம்.” என்று கூறியுள்ளார்.