full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காஜலின் சமூக அக்கறைக்கு குவிந்த பாராட்டு

ஆணுறை விளம்பரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை டி.வி.யில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சாவந்த், ‘ஆணுறை விளம்பரத்தில் நான் நடித்ததால் தான் மத்திய அரசு இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது” என்று குறைகூறி இருந்தார்.

பிரபல இந்தி நடிகர்-நடிகைகள் பலர் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் புதிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு குறித்து காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றால், ஆணுறை விளம்பரம் மிகவும் முக்கியம். அந்த விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும். அதைபார்த்து குழந்தை பெறுவதை குறைத்துக்கொள்வார்கள்” என்றார் சிரித்துக்கொண்டே.

காஜலின் இந்த கருத்துக்கு, ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் வரவேற்பு தெரிவித்துளனர். ரசிகர்களும் காஜலின் சமூக அக்கறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.