கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு

cinema news News
0
(0)

கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு

 

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில், “கலியுகம்” திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “கலியுகம்” திரைப்படம், மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார்.

ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும்.

இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன் சுப்ரமணி, அஸ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். உலகத் தரத்தில், உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், மிகச்சிறந்த திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து, இயக்கம் – பிரமோத் சுந்தர்
தயாரிப்பாளர் – கே.எஸ். ராமகிருஷ்ணா, கே. ராம்சரண்
இணை தயாரிப்பாளர் – யு.சித்தார்த்
தயாரிப்பு நிறுவனம் – ஆர்கே இன்டர்நேஷனல், பிரைம் சினிமாஸ்
ஒளிப்பதிவாளர்: கே.ராம்சரண்
கலை இயக்குனர் – எம்.சக்தி வெங்கட்றாஜ்
இசையமைப்பாளர்: டான் வின்சென்ட்
எடிட்டிங் – நிம்ஸ்
வசனம் – கார்த்திக் குணசேகரன், ஆத்ரேயா & கற்கவி
உடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா
ஒலி வடிவமைப்பு – டான் வின்சென்ட்
ஒலி கலவை – தபஸ் நாயக்
கலரிஸ்ட் – எஸ். ரகுநாத் வர்மா (B2H ஸ்டுடியோஸ்)
VFX: CA டிஜிட்டல் ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
போஸ்டர் டிசைன் – சிவகுமார் (சிவாடிஜிட்டலார்ட்)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.