full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் : கமல்ஹாசன்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார்.

அப்போது பேசிய கமல், “மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாமுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எங்களது அரசியல் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. கனவுகளில் இருந்து தான் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. எனவே எங்களுடைய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

இதனையடுத்து, பள்ளிக்கரணையில் மழைபாதித்த பகுதிகளை பார்வையிடும் கமல், மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது கமல்ஹாசன் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.