full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :
Latest Update

காவிரி நீர் தீர்ப்பு ஏமாற்றமே- நடிகர் கமல்ஹாசன்

 
தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். இதில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசும் போது,
 
“தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனினும் காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அழுத்தமான உத்தரவு ஓரளவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓட்டு விளையாட்டுக்காக இரு மாநிலங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சனைக்கு வழி வகுக்கக் கூடாது. ஆதி காலத்தில் இருக்கும்போதுலிருந்து காவிரியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இனிமேல் கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிக்க வேண்டும். வீடு பற்றி எரியும் போது பீடி பற்ற வைக்கின்ற வாக்கு விளையாட்டுகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். போராட்டம் இதற்கு தீர்வாகாது. காந்தி வழியில், தீர்வு காண்பதே சிறந்தது. நிலத்தடி நீர் மட்டத்தை அரசு பாதுகாக்கவில்லை என்றால், நாம் தான் அதை பாதுகாக்க வேண்டும்” என்றார்.