full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“இந்தியன் 2” பக்கம் கவனத்தை திருப்பும் கமல்!!

ஒருவழியாக “விஸ்வரூபம் 2” திரைப்படம் வெளியாவதற்கான உறுதியான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. ஆகஸ்ட் -10 ஆம் தேதியை வெளியீட்டு தினமாக குறித்து, புரமோஷன் வேலையை முடுக்கி விட்டிருக்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன். ஒருபக்கம் அரசியல் செயல்பாடுகள், இன்னொரு பக்கம் “பிக்பாஸ் 2” என பயங்கர பிஸியாக இருந்தாலும் “விஸ்வரூபம் 2” படத்தின் மீது தான் அவரது முழு கவனமும் இப்போதைக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், அது பொய்யென்று நிரூபிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கமல். அதன்படி அவரது கவனமெல்லாம் “இந்தியன் 2” படத்தின் மீது இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் “பிக்பாஸ் 2” நிகழ்ச்சியில் பேசிய கமல், “இந்தியன்-2” படம் குறித்து பேசி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் “இந்தியன்-2” படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

“இந்தியன்” முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் அரசியல் காரம் தூக்கலாக இருக்க வேண்டும் என ஷங்கரிடம் கமல் கூறியிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள “சபாஷ் நாயுடு” படத்தின் படப்பிடிப்பிலும் கமல் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.