full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கமல் உணர்ந்த பெரியாரின் கனவு

முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், `திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.

திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். மேலும் பெரியாரின் கனவை உணர முடிகிறது என்றும் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் சமீபத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சமீபத்தில் கேரளாவில் சந்தித்தார். அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து பினராயி விஜயனிடம் அறிவுரைகளைக் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.