அடிமேல் அடி வைத்து, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை வேலைகளையும் மிகவும் சூதானமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல்வாதிகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து, மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வரை தேர்ந்த அரசியல்வாதியை விட, மிக நுணுக்கமாக காய்களை நகர்த்துகிறார்.
கொள்கை கருத்தியல் என்னவென்றே அறிவிக்காமல், கூட்டத்தை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தனது பிறந்தநாளான நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு, மையம் விசில் என்ற ஒரு செயலியின் பேரை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, பட வேலைகளைப் பார்க்க கிளம்பினார். கொல்கத்தாவில் நடந்த படவிழாவிற்கு போன போது, மம்தா பானர்ஜியை சந்தித்ததே மிகப்பெரிய அரசியல் செய்தியானது.
இந்த சூழலில், டுவிட்டரில், “அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.