full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சினிமாவில் 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன் – வாழ்த்திய பிரபலங்கள்

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் கட்சி தலைவராகி இருக்கிறார். கமல்ஹாசனின் 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனை வைத்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் படங்களை இயக்கிய பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள். உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், “உலக நாயகனின் சாதனைகள் அளப்பரியது. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். நடிகை பார்வதி வெளியிட்டுள்ள பதிவில், “உலக நாயகனின் 61 ஆண்டு சினிமா சாதனையை கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார். இயக்குனர்கள் கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ், நடிகர் மனோஜ், பாடலாசிரியர் விவேக் உள்பட பலர் வாழ்த்தி உள்ளனர்.