“பிக்பாஸ்” இரண்டாம் சீசன் தொடக்கத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது மமதி சாரியின் வெளியேற்றம். பொதுவாக “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றுவது சகஜம் தான் என்றாலும், மமதி சாரியின் வெளியேற்றம் என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எலிமினேசனுக்குப் பிறகு வார இதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், தான் வெளியேற்றப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
“அந்த டாஸ்க்குக்கான உண்மையான அர்த்தம், ஆண் போட்டியாளர்களுக்குச் சரியா புரியலைனு நினைக்கிறேன். சக்கைப் பிழிப் பிழிஞ்சாதான், உதவியாளர் வேலை செய்றதா அர்த்தம்னு நினைச்சாங்க. பெண்களின் வேலை செய்யும் திறனையும் மீறி எங்ககிட்ட வேலை வாங்கினாங்க. சமையல், துணிதுவைக்கிற வேலைகளைச் செஞ்சு என் கையில நிறைய காயங்கள் உண்டாச்சு. என் வீட்டுலயும் பணியாளர் இருக்காங்க. அவங்களை குடும்பத்தில் ஒருத்தராதான் நடத்தறேன்.
இந்த டாஸ்க் மூலம், பெண்கள் மேல ஆண் போட்டியாளர்கள் வெச்சிருந்த மதிப்பீட்டை புரிஞ்சுக்க முடியுது. கையில ஒரு அதிகாரம் கிடைச்சதும், அதை எப்படிச் செய்யலாம்னு நினைக்கிறது அறிவு. எப்படி வேணாலும் செய்யலாம் என்பது அசிங்கம். சில ஆண்கள் தங்களோட உள்ளாடையை எங்கிட்ட துவைக்க கொடுத்தாங்க. இதெல்லாம் தவறில்லையா? செய்தாங்க. அதெல்லாம் தப்புன்னு அவங்க மனதளவில் உணரவும் இல்லை.
பெண்கள் எஜமானர்களான நேரத்தில், நான் பொன்னம்பலத்தையும், மும்தாஜ் அனந்த் அவர்களையும் பணியாளர்களா செலக்ட் பண்ணினோம். காரணம், அவங்க உடல்நிலை சரியில்லாதவங்க என்பதால். மத்த பெண்கள்கிட்ட அவங்க போயிருந்தா, நிறைய வேலை வாங்கி அவங்களை கஷ்டப்படுத்தியிருப்பாங்க. நாங்க அப்படி செய்யலை. ஆனாலும், எங்க இருவருக்கும் கெட்டப் பெயர்தான் வந்துச்சு. மனிதர்களின் மனநிலையை நீங்களே கணிச்சுக்கோங்க. கமல்ஹாசன் அவர்கள் இதைப் பத்தி பேசாததுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியலை” என்றார்.