full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கமலின் அரசியல் பயண விவரம்

 
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்க இருக்கிறார்.
 
வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து எந்த ஊர் வழியாக சுற்றுப்பயணம் செல்வது, எங்கு மக்களுடன் உரையாடுவது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், 
 
காலை 7.45 மணியளவில் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகிறார். 
 
காலை 8.15 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார். 
 
காலை 8.50 மணியளவில் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார். 
 
காலை 11.10 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகிறார்.
 
காலை 11.20 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்திலிருந்து மதுரைக்கு கிளம்புகிறார்.
 
நண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் கமல் பொதுக்கூட்டம் நடத்துகிறார். 
 
பிற்பகல் 2.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்றுமுன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்டுகிறது.
 
பிற்பகல் 3 மணியளவில் மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
 
மாலை 5 மணியளவில் மதுரை வருகிறார். (அங்கு ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே) 
 
பின்னர் 6 மணியளவில் அரசியல் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்.
 
மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. 
 
இரவி 8.10 முதல் 9 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.