ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கமல்!

News

ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார்.

அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் நடக்கும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதற்காக அவர் இன்று (26.2.2018) மாலை மும்பைக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

கமலும் ஸ்ரீதேவியும் இணைந்து 26 படங்களில் நடித்துள்ளார்கள்.

ரஜினி, கமல் இவர்களைத் தவிர தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்கள் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.