full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கோட்டைத் தாண்டி புகழைச் சூடு : கமல்

ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ள புரோ கபடி போட்டியில் இந்த முறை தமிழகம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 4 புதிய அணிகள் புதிதாக இடம் பெற்று உள்ளன. இதில் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அணியின் உரிமையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், தமிழக அணி கேப்டனாக அஜய்தாகூரும் உள்ளனர்.

தற்போது தமிழக அணியின் விளம்பரத் தூதராக கமல் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய கமல்ஹாசன், “கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். நமது முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள்.” என்றார்.