full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிறந்த நாளில் பிறக்கும் கமலின் புதிய கட்சி?

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதலும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்தும் விமர்சனங்களை முன் வைத்து வந்த கமல்ஹாசனும், “அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்.” என்றார்.

அதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

தற்போது அவர், தனது அரசியல் பயண தொடக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டதாகவும், கட்சிக்கான பெயரைத் தேர்வு செய்வதில் கமல் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கட்சியின் கொள்கை, சட்ட திட்ட விதிகள் என அனைத்தும் தயாராகி வருகிறதாம். மேலும் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது கட்சி குறித்த அறிவிப்பை அவரது பிறந்தநாளான வருகிற 7-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் தன்னுடனும், மக்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், தமிழகத்திற்கு கடமை செய்ய நினைப்பவர்களை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ரசிகர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.