full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

லட்சுமி சரவணகுமாரின் வசனத்தில் கமலின் புதிய படம் ?

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஸ்வரூபம்-2 படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கமல் தற்போது அரசியலில் பிசியாகி இருக்கிறார்.

கமல்ஹாசன் அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு படத்தினை தொடங்கினார் சங்கர். படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற மே மாதம் துவங்க இருக்கிறது.

லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்திற்கு வசனங்களை பிரபல எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் கானகன் என்ற கதையின் மூலம் பிரபலமானவர்.

அதுமட்டுமில்லாமல் இவர் வசந்தபாலனின் காவியத்தலைவன், அரவாண் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரின் 2.0 மேக்கிங் வீடியோவிலும் லட்சுமி சரவணக்குமார் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் திரைக்கதையில், சங்கருடன் எழுத்தாளர்கள் கபிலன் வைரமுத்து இணையவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.