full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அனுதாபமும், நிதியுதவியும் போதாது : கமல்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.