full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காஞ்சி மடாதிபதி மரணமடைந்தார்!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.