full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வடிவேல் பாலாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவுத்துள்ள கார்த்தி, தனுஷ்

வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவுத்துள்ளனர்.

நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது கை, கால்களும் செயல் இழந்தன. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் பாலாஜி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது திடீர் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார். நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நல்ல திறமையாளரான வடிவேல் பாலாஜியின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தை அளித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

வடிவேல் பாலாஜியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் நிலையில் அவரது உடலுக்கு ரோபோ சங்கர், ராமர் உள்பட அவருடன் பணிபுரிந்த நகைச்சுவை கலைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.