full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

உதயநிதி படத்தில் நவரச நாயகன்

நீண்ட இடைவேளைக்கு பிறகு `அனேகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த `நவரச நாயகன்’ கார்த்திக் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, அவரது மகன் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து `மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியின் 17-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவ்வாறாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக `மேயாத மான்’ படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரலில் துவங்க இருக்கிறது.

உதயநிதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அதேபோல் `இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.